உளுந்தூர்பேட்டையில் சாமி தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 31 March 2026

உளுந்தூர்பேட்டையில் சாமி தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர்.

 


உளுந்தூர்பேட்டையில் சாமி தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரா. குமரகுரு, தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு இன்று உளுந்தூர்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.


தேர்தலை முன்னிட்டு ஆன்மிக வழிபாட்டுடன் தனது பிரச்சாரத்தை தொடங்கிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவை பெற்று வெற்றி பெற வேண்டியும், தொகுதி மக்களின் நலன், வளர்ச்சி மற்றும் அமைதி நிலைக்க வேண்டியும் சிறப்பு அர்ச்சனை செய்து பிரார்த்தனை மேற்கொண்டார்.


இதையடுத்து, கோவில் அர்ச்சகர்கள் வேட்பாளருக்கு விசேஷ பூஜைகள் நடத்தி, பிரசாதம் வழங்கினர். கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு ஆன்மிக நம்பிக்கையையும், அரசியல் உற்சாகத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.


இந்த நிகழ்வில் ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேட்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.


தொடர்ந்து, வேட்பாளர் இரா. குமரகுரு, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இந்த சாமி தரிசனம் நிகழ்வு, உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உற்சாகமான தொடக்கமாக பார்க்கப்படுகிறது..


D. செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad